கோவையில் நடைபெற்ற வின்டேஜ் கார் கண்காட்சியில் சுமார் 50க்கும் மேற்பட்ட பழங்கால கார்கள் அணிவகுத்துச் சென்றது.
கோவையின் பல்வேறு சிறப்புகளை கூறும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் கோவை விழா நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு கண்காட்சிகள் நடத்தப்படுவது வழக்கம்.
இதன் ஒரு பகுதியாக இந்த ஆண்டு கோவை விழாவை முன்னிட்டு, ரேஸ்கோர்ஸ் சாலையில் வின்டேஜ் கார்கள் அணிவகுத்து பேரணியாகச் சென்றது. இதில் கோவை உட்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தங்களின் பழங்கால கார்களை அணிவகுத்துச் சென்றனர்.
சுதந்திரத்துக்கு முன் பயன்படுத்திய பல்வேறு வகையான கார்கள் முதல் 1995ம் ஆண்டு வரை உள்ள 50க்கும் மேற்பட்ட பழைய மாடல் கார்கள் இடம்பெற்றுள்ளன. இதில் பழைய மாடல் பென்ஸ், செவர்லே, ஃபோர்டு, பத்மினி, அம்பாசடர், வோக்ஸ்வேகன், பழைய ஜீப் உள்ளிட்ட கார்கள் ரேஸ்கோர்ஸ் பகுதியில் வலம் வந்தன. இதனை பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டுகளித்தனர்.
