விஜயதசமியை முன்னிட்டு ஈஷா யோகா மையத்தில் அமைந்துள்ள லிங்கபைரவி வளாகத்தில் பழங்குடியின குழந்தைகள் உட்பட நூற்றுக்கணக்கான குழந்தைகளுக்கு வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் ஆதியோகி, தியானலிங்கம் தரிசனத்திற்காக பல்லாயிரக்கணக்கான மக்கள் ஈஷாவிற்கு வருகை புரிந்தனர்.

கல்வி, கலை, தொழில் ஆகியவற்றில் புதிய முயற்சிகளை விஜயதசமி திருநாளில் தொடங்குவதை மக்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். அந்த வகையில் லிங்க பைரவி வளாகத்தில் ஈஷாவை சுற்றியுள்ள முள்ளங்காடு, தானிக்கண்டி, பட்டியார்கோவில்பதி, மடக்காடு உள்ளிட்ட பழங்குடியின கிராமத்து குழந்தைகள் உள்பட நூற்றுக்கணக்கான குழந்தைகளுக்கு வித்யாரம்பம் நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது.

