கோவை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள விக்ட்டோரியா ஹாலில் மேயர் ரங்கநாயகி தலைமையில் இன்று மாமன்ற சாதாரண கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு முன்னதாக வெள்ளலூர் குப்பைக்கிடங்கு தொடர்பான பிரச்சனையை பிரதானமாக முன்வைத்த அதிமுக கவுன்சிலர்கள் ரமேஷ், ஷர்மிளா மற்றும் பிரபாகரன், துணியால் தங்கள்வாயை மூடிக்கொண்டு, பதாகைகளை ஏந்தி எதிர்ப்பை தெரிவித்தனர்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரபாகரன், வெள்ளலூர் குப்பை கிடங்கு பிரச்சனையை அரசு உடனே சரி செய்ய வேண்டும், இல்லையேல் அதிமுக தரப்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என கூறினார்.
மேலும் அவர், சில இடங்களை சுட்டிக்காட்டி, கோவை மாநகரில் போடப்பட்ட சாலைகள் தரமாக இல்லை என குற்றம்சாட்டினார். இதனால் விக்ட்டோரியா ஹாலின் வெளியே சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
