இந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் தமிழ்நாடு வனத்துறையுடன் இணைந்து மரக்கன்று நடும் விழாவில் கல்லூரியின் அறங்காவலர் சரஸ்வதி கண்னையன் பங்கேற்று, மரக்கன்றுகள் நடும் விழாவை துவக்கி வைக்கிறார்.

இந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில், தமிழ்நாடு வனத்துறையுடன் இணைந்து நாட்டு நலப்பணித் திட்டம், ரோட்ராக்ட் கிளப் மற்றும் லியோ கிளப் சார்பில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.

இந்நிகழ்வில் 500 மரக்கன்றுகள் நடப்பட்டன. மேலும், 1000 மரக்கன்றுகளை நடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

விழாவுக்கு கல்லூரியின் அறங்காவலர் சரஸ்வதி கண்னையன் தலைமை வகித்தார். நிகழ்வில் கல்லூரி முதல்வர் ஜெயா, மகுடேஷ்வரன், வனத்துறை அதிகாரி தியாகு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்த விழாவை நாட்டு நலப்பணித் திட்ட அதிகாரி பிரசண்ண வெங்கடேசன், ரோட்ராக்ட் கிளப் ஒருங்கிணைப்பாளர்கள் திலக், பிரதீப் ஜான்சன், லியோ கிளப் ஒருங்கிணைப்பாளர் விகாஸ் மற்றும் மாஸ்டர் ஆஃப் இன்டர்நேஷனல் பிஸ்னஸ் மாணவி பிரியா ஒருங்கிணைத்தனர்.