ஸத்குரு ஸ்ரீ தியாகராஜா ஸ்வாமிகளின் 55-ஆம் ஆண்டு ஆராதனை விழா மற்றும் மும்மூர்த்திகள் மஹோத்ஸவம் கோவை ராம்நகர் ஸ்ரீ கோதண்டராமஸ்வாமி கோவிலில் 5 நாட்கள் நடைபெற்றது.
சிறப்பு விருந்தினராக பி.எஸ்.ஜி மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் புவனேஸ்வரன் கலந்துகொண்டார். கலைமாமணி முடிகொண்டான் ஸ்ரீ ரமேஷ் சிறப்புரை வழங்கினார். இதில் தியாகராஜ கீர்த்தனை பாடலை, ராதா நடராஜன் பாடினார்.
