கோவை சோமையம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட மருதமலை அடிவாரத்தில் உள்ள குப்பை கிடங்கை விரைவில் வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் அல்லது இதற்கு ஒரு தீர்வு கிடைக்கும் வரை குப்பை கிடங்கினுள் வனவிலங்குகள் உள்ளே வராமல் தடுக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்,ஏனெனில் குப்பை கிடங்கில் குப்பைக்களை உண்ண யானைகள் தினம்தோறும் மாலை மற்றும் இரவு நேரங்களில் குப்பை கிடங்கிற்கு விசிட் செய்வதை வாடிக்கையாக உள்ளது, யானை குப்பைகளை உண்கின்றன என்பதை தவிர அந்த குப்பையில் என்னென்ன உள்ளது என்று பார்த்தால் குழந்தைகளின் டயாபர்கள், பெண்களின் நாப்கின்கள், ஆணுறைகள் அழுகிப்போன காய்கறி பழங்கள், மேலும் கெட்டுப்போன உணவுகளை உண்பதால் யானைகள் மற்றும் வன உயிரினங்களின் வாழ்க்கை முறை முற்றிலுமாக மாறி வருகிறது, யானைகளின் சாணத்தில் வெறும் பிளாஸ்டிக் கவர்கள் மட்டுமே இருக்கின்றன,இந்த குப்பைக் கிடைங்கின் மொத்த பரப்பளவு 2 ஏக்கர், தினசரி 3 டன் குப்பை கழிவுகள் இங்கு கொட்டப்பட்டு வருகின்றன. சுற்றுச்சுவர் அமைக்க, குப்பைக்கிடங்கிற்கு 70 லட்சம் ரூபாய் தேவைப்படுவதால், சுற்றுச்சுவர் அமைப்பதா, மின் வேலி அமைப்பதா என, இறுதி செய்யவில்லை. ஆனால், மின் வேலி அமைக்க வெறும் 20 லட்சம் மட்டுமே தேவைப்படுகிறது. எனவே தமிழக அரசு இந்த திட்டங்களை கைவிட்டு விட்டு உடனடியாக குப்பை கிடங்கை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டுமென வன ஆர்வலர்களும்,பொதுமக்களும் எதிர்பார்க்கின்றனர். யானைகள் மற்றும் மன விலங்குகள் குப்பைகளை இன்னும் தொடர்ச்சியாக உண்டு வந்தால் எதிர்காலத்தில் மேற்கு தொடர்ச்சி மலைகளில் வன உயிரினங்களே இல்லாத சூழ்நிலை ஏற்படும், நம் கண் எதிரே வனவிலங்குகள் மெல்ல மெல்ல அழிந்து வருவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் தமிழக அரசும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.