தி சென்னை சில்க்ஸ்-ன் ‘கே.கே.வி கிரீன் விருதுகள் மூன்றாவது பதிப்பு 2025’ அவினாசி சாலை, அண்ணாசிலை அருகில் உள்ள தனியார் அரங்கில் சனிக்கிழமை (6.9.2025) நடைபெற்றது.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக திரைப்பட தொகுப்பாளர் லெனின், தலைமை விருந்தினராக விஜயா பதிப்பகத்தின் தலைவர் வேலாயுதம் கலந்துகொண்டனர். இதில் கோவை அரசினர் கலைக்கல்லூரி பேராசிரியர் சுகுணா, பீம் சினிமா ஆர்.ஆர்.சீனிவாசன், இதயவனம் இளங்கோ, அந்தியூர் அன்புராஜ் மற்றும் அமராபரன் சங்கரசுப்பு ஆகியோருக்கு கே.வி.வி விருதுகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் தி சென்னை சில்க்ஸ் தலைவர் டி.கே.சந்திரன், நிர்வாக இயக்குநர் விநாயகம் மற்றும் அவர்களது குடும்பத்தார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
