கோவை மாநகரில் முதல் முறையாக 24 மணி நேரமும் இயங்கும் வகையில் ‘டெர்மினல் 2 கஃபே’ அவினாசி சாலையில் உள்ள விமான நிலையம் அருகில் தொடங்கப்பட்டுள்ளது. ஹரிபவனம் ரெஸ்டாரண்ட்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட்டின் புதிய முயற்சியாக தொடங்கப்பட்டுள்ள இந்த கஃபே, பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
இதுகுறித்து இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பாலச்சந்தர் ராஜு கூறியதாவது: டெர்மினல் 2 கஃபே 24 மணி நேரமும் இயங்கும். உள்நாட்டு உணவுகள் முதல், உலக நாடுகளில் கிடைக்கும் பிரபல உணவுகள், பானங்கள் அனைத்தும் இங்கு கிடைக்கும்.
காபி, வடை, போண்டா, பஜ்ஜி, ஜூஸ், லஸ்ஸி, முதல் மில்க்ஷேக், பர்கர், சாண்ட்விச், சிக்கன்ரோல், பாஸ்தா, ஸிஸ்லர் என தென்னிந்திய மற்றும் சர்வதேச உணவுகளும் கிடைக்கும். கோவை மக்கள் விரும்பும் பழைய சோறு உடன் கருவாடு, கம்பங்கூழ், அரிசி பருப்பு சாதம், பிரியாணி ஆகியவையும் கிடைக்கும்.
கூடுதல் சிறப்பம்சமாக அதிகாலை நடைபயிற்சி, ஜிம்மில் உடற்பயிற்சி செய்பவர்களுக்கு புரோட்டீன் ஷேக், ஏ.பி.சி ஜூஸ், அருகம்புல் ஜூஸ், நெல்லிக்காய் ஜூஸ் போன்ற ஜூஸ் வகைகளும் கிடைக்கும்.
அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் நோயாளிகளை காண வரும் உறவினர்கள், விமான நிலையத்திலிருந்து நள்ளிரவில் வரும் பயணிகள், அருகிலுள்ள ஐ.டி. பூங்காக்களில் வேலை செய்து நள்ளிரவில் வீடு திரும்பும் திரும்புவோருக்காக எப்போதும் உணவு கிடைக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம் எனக் கூறினார்.
