டாக்டர் மகாலிங்கம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் சக்தி குழும நிறுவனங்கள் இணைந்து நடத்திய “சக்தி ஹேக்கத்தான் 1.0″ என்ற 24 மணி நேர தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான தொழில்நுட்பப் போட்டி இன்று தொடங்கியது.

கல்வி மற்றும் தொழில் துறையை இணைக்கும் நோக்கில், சக்தி குழுமத்தின் உணவு, போக்குவரத்து, வாகன உற்பத்தி உள்ளிட்ட துறைகளிலிருந்து பெறப்பட்ட சிக்கல்களுக்கு, மாணவர்கள் புதுமையான தீர்வுகளை உருவாக்கி, மாதிரிகள் தயாரித்து, தொழில்நுட்ப நிபுணர்களுக்கு வழங்குகின்றனர்.

1,000 விண்ணப்பங்களில் இருந்து தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களைச் சேர்ந்த 61 அணிகள் தேர்வு செய்யப்பட்டு 25 தலைப்புகளில் அறிக்கைகள் இடம்பெற்றுள்ளன. இதனை 8 பேர் கொண்ட நடுவர் குழு மதிப்பீடு செய்கிறது.

நாளை காலை 10.30 மணிக்கு நடைபெறும் நிறைவு விழாவில், மொத்தம் ரூ.2,00,000 பரிசுத்தொகையுடன் வெற்றியாளர்கள் அறிவிக்கப்படுவர். முதல் பரிசு ரூ.1,00,000, 2ஆம் பரிசு ரூ.50,000, 3ஆம் பரிசு ரூ. 25,000, மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட 5 அணிகளுக்கு தலா ரூ. 5,000 ஆறுதல் பரிசாக வழங்கப்படும்.

தொடக்க விழாவில் கல்லூரி துணை முதல்வர் செந்தில் குமார், மாணவர் ஆராய்ச்சி மன்றத்தின் தலைவர் சுதாகர், பிற துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.