டாக்டர் மகாலிங்கம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் சக்தி குழும நிறுவனங்கள் இணைந்து 24 மணி நேர தேசிய அளவிலான கல்லூரிகளுக்கு இடையேயான ‘சக்தி ஹேக்கத்தான் 1.0’ தொழில்நுட்பப் போட்டியை நடத்தியது.

சிறப்பு விருந்தினராக கல்லூரியின் முன்னாள் மாணவர், கோயம்புத்தூர் போஸ்ச் பொறியியல் மேலாளர் கிருஷ்ணராஜ் நடராஜ், தமிழ்நாடு வழிகாட்டுதல் துறை துணைத் தலைவர் விக்ராந்த் சத்தியமூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டனர்.

தொழில்நுட்பப் போட்டியில் திருவள்ளூர் ஆர்.எம்.டி பொறியியல் கல்லூரி மாணவர் கிருஷ்ண விஷ்வா மற்றும் குழுவினர் முதலிடத்தை பிடித்து ரூ.1,00,000 பரிசு வென்றனர். பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கழகம் மாணவி பிரியா தர்ஷினி மற்றும் குழுவினர் 2ஆம் இடத்தைப் பிடித்து ரூ.50,000 பரிசு வென்றனர்.

டாக்டர் மகாலிங்கம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர் அருண் தர்ஷன் மற்றும் குழுவினர் 3ஆம் இடத்தைப் பிடித்து ரூ. 25,000 பரிசு வென்றனர். மேலும் 5 அணிகளுக்கு ஆறுதல் பரிசாக ரூ.5,000 வழங்கப்பட்டது.

நிகழ்வில் கல்லூரி முதல்வர் கோவிந்தசாமி, துணை முதல்வர் செந்தில்குமார், மாணவர் ஆராய்ச்சி மன்றத்தின் தலைவர் சுதாகர், பிற துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.