சுகுணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், ஜெனரேட்டிவ் ஏஐ என்ற தலைப்பில் சிறப்பு ஆசிரியர் திறன் மேம்பாட்டுத் திட்டம் நடைபெற்றது.
திருநெல்வேலி ஜாய் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியை சேர்லின் மிஷ்மா முதன்மை வளவாளராகக் கலந்துகொண்டு பேசுகையில், நவீன வகுப்பறை கற்பித்தல் முறைகள் மற்றும் கல்வி ஆராய்ச்சிகளை மேம்படுத்த ‘ஜெனரேட்டிவ் ஏஐ’ தொழில்நுட்பங்களை எவ்வாறு திறம்படப் பயன்படுத்த வேண்டும் என்று விரிவாக விளக்கினார். தொடர்ந்து பேராசிரியர்களின் சந்தேகங்களுக்கான கேள்வி-பதில் அமர்வு நடைபெற்றது.
இதில் கல்லூரி முதல்வர் ராஜ்குமார், இயக்குனர் மற்றும் செயலாளர் சேகர், பேராசிரியர்கள் கலந்துகொண்டனர். மேலும் நிகழ்வில் மெட்ராஸ் லைப்ரரி அசோசியேஷன் அமைப்பால் “சிறந்த இளம் நூலகர் விருது” வழங்கி கௌரவிக்கப்பட்ட கல்லூரியின் நூலகர் மெல்வின் ஜெபராஜிற்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
