தமிழக சட்டப்பேரவையில், 2026 -2027 ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்தார். அப்போது பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு பேசினார். இதில் பல துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இவற்றில் தொழில்துறைக்கு எவ்வளவு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்ற விவரத்தை வெளியிட்டுள்ளார். அதன்படி,

  • தொழில்துறைக்கு ரூ.4,882 கோடி ஒதுக்கீடு
  • செமி கண்டக்டர் இயக்கத் திட்டத்தை 5 ஆண்டுகளுக்கு செயல்படுத்த ரூ.500 கோடி ஒதுக்கீடு.
  • திருச்சி, ஓசூர், மதுரையில் புதிய டைடல் பாரக் அமைக்க ரூ.1,070 கோடி ஒதுக்கீடு.
  • சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு ரூ.1,943 கோடி ஒதுக்கீடு.
  • தொழிலாளர் நலத்துறைக்கு ரூ.1,996 கோடி ஒதுக்கீடு.
  • தொழில், முதலீடு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறைக்கு ரூ.4,282 கோடி ஒதுக்கீடு.