டாக்டர் என்.ஜி.பி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொழில்முறை கணக்குகளுடன் வணிக இளங்கலை துறை சார்பில் “நிதி துறையில் செயற்கை நுண்ணறிவு – ஒரு அச்சமா அல்லது வாய்ப்பா?” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.

நிகழ்ச்சியின் சிறப்பு அம்சமாக, லார்சன் & விப்ரோ லிமிடெட் நிறுவனத்தின் முன்னாள் நிதி மற்றும் நிர்வாக இயக்குநர் சுப்பிரமணியம் பங்கேற்று, செயற்கை நுண்ணறிவின் வரலாறு, வேகமான வளர்ச்சி மற்றும் அதன் விளைவுகள், தன்னறிவு மற்றும் சுயவிமர்சனத்தின் முக்கியத்தும் குறித்து விரிவாக விவரித்தார்.