சுகுணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அண்மையில் கல்லூரியின் ஆண்டுவிழா மற்றும் விளையாட்டு தினவிழா கொண்டாடப்பட்டது. இதில் கல்லூரியின் தலைவர் லட்சுமிநாராயணசாமி, சுகுணா லட்சுமிநாராயணசாமி ஆகியோர் தலைமை தாங்கினர்.
பாரதியார் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் (பொறுப்பு) ரூபாகுணசீலன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் பேசுகையில், ஆற்றலும், வலிமையும் இருந்தாலும் கல்வியும் விடாமுயற்சியுமே உன்னை வெற்றி அடையச் செய்யும். எனவே நன்கு கற்று முனைப்போடு செயல்படுங்கள் என்று மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து, விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும் ஓவரால் சாம்பியன்ஷிப் கோப்பையும் வழங்கப்பட்டது. போட்டியில் வெற்றி பெற்ற பேராசிரியர்களுக்கும் பரிசுகளும் பதக்கங்களும் வழங்கப்பட்டன. பின்னர் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இந்நிகழ்வில் கல்லூரியின் இயக்குனர் சேகர், கல்லூரியின் முதல்வர் ராஜ்குமார், ஆங்கிலத்துறை பேராசிரியர் சோபியா மற்றும் தமிழ்த்துறை பேராசிரியை சாந்தாமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.