சுகுணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முன்னாள் மாணவர் சங்கக் கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். கல்லூரியின் தாளாளர் லட்சுமி நாராயணசாமி மற்றும் தலைவர் சுகுணா லட்சுமி நாராயணசாமி வழிகாட்டுதலின்படி நடைபெற்றது.
தலைமை விருந்தினராக அட்ரா ப்ராடக்ட் ஸ்டூடியோ மனித வள மேலாண்மை இயக்குனர் புனிதா முருகேசன் கலந்து கொண்டு, கல்லூரி வழங்கிய கல்வி மற்றும் ஒழுக்கப் பயிற்சி தமது வாழ்க்கையில் முக்கிய பங்கு வகித்ததாகக் கூறினார். முன்னாள் மாணவர்கள் கல்லூரி வளர்ச்சிக்கும், மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கும் தொடர்ந்து பங்களிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
முன்னாள் மாணவர்கள் பலர் தங்களது கல்வி மற்றும் தொழில்முறை அனுபவங்களை பகிர்ந்து கொண்டு, இன்றைய மாணவர்களுக்கு ஊக்கமளித்தனர். நிகழ்ச்சியில் கல்லூரியின் இயக்குனர் மற்றும் செயலர் சேகர், பேராசிரியர்கள், முன்னாள் மாணவர்கள், மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
