டாக்டர் என்.ஜி.பி. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வணிகவியல் துறை சார்பாக தி இன்ஸ்டிடியூட் ஆஃப் காஸ்ட் அக்கவுன்டன்ட்ஸ் ஆஃப் இந்தியா உடன் இணைந்து ‘புதுமைப்படுத்து, ஒத்துழை, ஊக்கப்படுத்து’ என்ற தலைப்பில் மண்டல அளவிலான மாணவர்கள் விழாவான காஸ்மேஃபெஸ்ட் 2025 நிகழ்வு நடைபெற்றது.

டாக்டர் என்.ஜி.பி கல்விக் குழுமத்தின் தலைவர் மருத்துவர்  நல்லா ஜி. பழனிசாமி நிகழ்விற்கு தலைமை தாங்கினார். இதில் புகழ்பெற்ற பரதநாட்டிய நடனக் கலைஞர் ஸ்ரீ ராமானுஜ தாசன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். ஐ.சி.எம்.ஏ.ஐ தலைவர் ஸ்ரீனிவாச பிரசாத், எஸ்.ஐ.ஆர்.சி.யின்  செயலாளர் பிரவீன் குமார், ஹைதராபாத் பிரிவு முன்னாள் துணைத் தலைவர் விஜய் கிரண் அகஸ்தியா ஆகியோர் கலந்து கொண்டனர்.

கல்லூரியின் முதல்வர் சரவணன், கல்விசார் இயக்குநர் பேராசிரியர் ராமமூர்த்தி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற நிறைவு விழாவில், வெற்றிபெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள், ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன. அதிக மதிப்பெண் பெற்ற நிறுவனத்திற்கு சிறந்த பங்கேற்பு நிறுவனத்திற்கான சிறப்புக் கோப்பை வழங்கப்பட்டது. பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த சுமார் 800 மாணவர்கள் இதில் பங்கேற்றனர்.