நடனம் என்பது வெறும் கலை மட்டுமல்ல; அது உடலையும், மூளையையும் புதுப்பிக்கும் ஒரு மென்பொருள் அப்டேட் என ஆய்வுகள் கூறுகின்றன.

இசையின் தாளத்திற்கு ஏற்ப உடலை அசைக்கும் போது, மூளையின் நினைவாற்றலை கட்டுப்படுத்தும் ஹிப்போகேம்பஸ் பகுதி வலுப்பெறுகிறது. இதனால் நரம்பு மண்டலங்கள் புத்துணர்ச்சி பெற்று செயல்படுகின்றன. மேலும், இது வயது முதிர்வால் ஏற்படும் மறதி போன்ற பிரச்சினைகளைத் தடுக்கவும் உதவுகிறது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

நடனம் ஆடும் தருணங்களில், உடலில் மனஅழுத்தத்தை உருவாக்கும் கார்டிசோல் என்ற ஹார்மோன் குறைகிறது. அதே நேரத்தில் மகிழ்ச்சியும் உற்சாகமும் தரும் டோபமைன் மற்றும் மனிதர்களுக்கிடையே பிணைப்பை உருவாக்கும் ஆக்ஸிடோசின் போன்ற ஹார்மோன்கள் அதிகமாக சுரக்கின்றன. இதனால் மனம் இலகுவாகி, உடலும் புத்துணர்ச்சியுடன் இயங்கத் தொடங்குகிறது.

மேலும், ஒருவரின் நடனத் திறனுக்கும் அவரது மரபணுக்களுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும் ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. இசைக்கு ஏற்ப உடலை அசைப்பது உடற்பயிற்சியாக மட்டுமல்லாமல், மனநலத்தை மேம்படுத்தும் ஒரு இயற்கையான வழியாகவும் அமைகிறது. இதன் மூலம் மரபணு ரீதியாகவும் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும்.

ஆகையால், நாள்தோறும் சில நிமிடங்கள் இசையுடன் இணைந்து நடனம் ஆடுவது வாழ்க்கையில் மகிழ்ச்சியையும், ஆரோக்கியத்தையும் கூட்டும் ஒரு எளிய வழியாகும் என்று ஆய்வாளர்கள் வலியுறுத்துகின்றனர்.