வெள்ளலுார் குப்பை கிடங்கு வளாகத்தில் தெருநாய்களுக்கான கருத்தடை சிகிச்சை மையம் திறக்கப்பட்டுள்ளது.
வெள்ளலூர் உரக்கிடங்கு வளாகத்தில், சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் ரூ.4.13 கோடி மதிப்பீட்டில் வீடில்லா நாய்களுக்கான கருத்தடை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை கோவை எம்.பி.,கணபதி ராஜ்குமார், பொள்ளாச்சி எம்.பி., ஈஸ்வரசாமி ஆகியோர் திறந்து வைத்தனர்.

50 தெருநாய்கள் அடைக்கும் கூண்டுகள், கால்நடை மருத்துவர் அறை மற்றும் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ளதையும் மற்றும் வீடற்ற நாய்களை கருத்தடை மையங்களுக்கு கொண்டு செல்லும் வகையில் ரூ.40.72 லட்சம் மதிப்பீட்டில் 4 நாய்கள் வாகன சேவைகளையும் தொடக்கி வைத்தனர்.
நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் பவன்குமார், மேயர் ரங்கநாயகி, மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
