ரத்த மையம் திறப்பு விழாவில் மாவட்ட ஆட்சியர் பவன்குமார், கரூர் வைஸ்யா வங்கி தலைமை நிர்வாக அதிகாரி ரமேஷ் பாபு, மருத்துவமனையின் தலைவர் டாக்டர் மோகன் பிரசாத், மருத்துவர்கள் சுமன், மித்ரா பிரசாத் கலந்துகொண்டனர்.
கரூர் வைஸ்யா வங்கி மற்றும் விஜிஎம் அறக்கட்டளை இணைந்து, கோவை விஜிஎம் மருத்துவமனையில் அதிநவீன ரத்த வங்கியை உலக ரத்த தானம் செய்பவர்கள் தினத்தன்று திறந்துள்ளது.
நிகழ்வில், கோவை ஆட்சியர் பவன்குமார், கரூர் வைஸ்யா வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ரமேஷ் பாபு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

தொடக்க நிகழ்வில், மருத்துவ இயக்குநரும் எலும்பியல் துறைத் தலைவருமான டாக்டர் சுமன், கல்லீரல் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைத் தலைவர் டாக்டர் மித்ரா பிரசாத் கலந்துகொண்டனர். கரூர் வைஸ்யா வங்கி ஊழியர்கள், நன்கொடையாளர்கள், பொதுமக்கள் பங்கேற்ற தன்னார்வ ரத்த தான முகாம் நடைபெற்றது.
செய்தியாளர் சந்திப்பில் விஜிஎம் மருத்துவமனையின் தலைவரும், ரத்த வங்கி திட்டத்தின் தலைவருமான டாக்டர் வி.ஜி. மோகன் பிரசாத் பேசுகையில்: அதிகரித்து வரும் பாதுகாப்பான ரத்தத்தின் தேவையுடன், கோவை மக்களுக்கு இந்த வசதியை கொண்டு வருவதில் பெருமை கொள்கிறோம். ரத்தம் இல்லாததால் எந்த உயிரும் இழக்கப்படக்கூடாது என்பதை உறுதி செய்வதே எங்கள் இலக்கு.

நவீன உபகரணங்கள், பயிற்சி பெற்ற மருத்துவ ஊழியர்கள் மற்றும் 24/7 கிடைக்கும் என்ற தொலைநோக்குப் பார்வையுடன், இந்த மையம் கடைசி நேர ரத்த பற்றாக்குறையை நீக்கி, நோயாளிகளின் நலனை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றார்.
