தமிழ்நாடு ஸ்டார்ட் அப் நிறுவனம் சார்பில், கோவை கொடிசியா வளாகத்தில் ‘உலகளாவிய ஸ்டார்ட் அப் மாநாடு 2025’ வரும் அக்டோபர் 9, 10ம் தேதிகளில் நடைபெற உள்ளது. இதில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார்.
மாநாட்டில் அரசுத் துறைகள், கார்ப்பரேட் நிறுவனங்கள், வேளாண்மை, விண்வெளி தொழில்நுட்பம், காலநிலை மாற்ற மேலாண்மை, மின் வாகனம், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட ஸ்டார்ட்அப் நிறுவனங்கள், 150க்கும் மேற்பட்ட மாணவர் ஸ்டார்ட் அப்கள் என 750 ஸ்டால்கள் இடம்பெற உள்ளன.
150க்கும் மேற்பட்ட தேசிய, சர்வதேச பேச்சாளர்கள், 100க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள், ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் என 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்கின்றனர். மேலும் மாநாட்டில் பங்கேற்க, https://tngss.startuptn.in/home என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.
