கோவையில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் சிங்காநல்லூர் கிருஷ்ணாபுரம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் வரும் 20ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது.
முகாமில் கண் சிகிச்சை, பல் சிகிச்சை, காது, மூக்கு, தொண்டை சிகிச்சை, பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, சர்க்கரை நோய், இருதய நோய், நுரையீரல் நோய், தோல் சிகிச்சை, நரம்பியல் சிகிச்சை, எலும்பு மருத்துவம், மாற்றுத்திறனாளிகள் மற்றும் இயன்முறை மருத்துவம், ஆயிஷ் மற்றும் சித்த மருத்துவம், மனநல மருத்துவம், குழந்தைகள் மருத்துவம், மகப்பேறு மருத்துவம், புற்றுநோய் மருத்துவம், காசநோய் மருத்துவம் உள்ளிட்ட 22 சிறப்பு மருத்துவ சிகிச்சைகள் பெற்றுக் கொள்ளலாம்.
முகாமில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத்திட்ட அடையாள அட்டை வழங்குதல், மாற்று திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்குதல் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான உறுப்பினர் அட்டை வழங்குதல் ஆகிய நிகழ்வுகளும் நடைபெற உள்ளது.
