ஸ்ரீராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் சிங்கப்பூரின் மேனேஜ்மெண்ட் டெவலப்மெண்ட் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சிங்கப்பூர் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகின.
எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் சுந்தர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். எம்டிஐஎஸ், சிங்கப்பூர் நிறுவனத்தைச் சேர்ந்த தலைமைச் செயலாளர் ஷரீஃப் அப்துல் ஜப்பார், துணைத்தலைவர் ரோஜர்தாம் காங்குவான் மற்றும் தென்ஆசியா ஆட்சேர்ப்பு தலைவர் (சர்வதேச வணிகம்) அருண் அங்கேவீடில் ஆகியோர் கலந்து கொண்டனர்.
புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம், செயற்கை நுண்ணறிவு மற்றும் இணைய முதுநிலை டிப்ளமோ பாடநெறிகள் தொடங்கப்பட்டுள்ளன. இப்பாடநெறிகள் மாணவர்கள் மற்றும் பட்டதாரிகளுக்கு மேம்பட்ட திறன்மேம்பாடு, சர்வதேச கல்வி அனுபவம் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ந்து வரும் துறைகளில் சிறந்த வேலைவாய்ப்புகளை வழங்கும் என சிறப்பு விருந்தினர்கள் தெரிவித்தனர்.
