ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி, இந்தோ ஷெல் காஸ்ட் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்டது.

இயந்திரவியல் துறைசார் தொழில் வள மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டு இயங்கிவரும் இந்நிறுவனத்தில், இயந்திரவியல் துறை பொறியியல் மாணவர்கள் பயிற்சி, பணி வாய்ப்பை பெற முடியும் .

எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் சுந்தர் ராமகிருஷ்ணன் மற்றும் இந்தோ ஷெல் காஸ்ட் நிறுவனத்தின் துணைத் தலைவர் சரவணன் ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். நிகழ்வில் கல்லூரியின் முதல்வர், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.