தாய்லாந்த் தலைநகர் பாங்காக்கில், ‘உலகளாவிய வருங்கால நிலைத்த கல்வி வளர்ச்சி நிலை’ மாநாடு இரண்டு நாட்கள் நடைபெற்றது.
பூட்டான் அரசின் உயர்கல்வித்துறை அமைச்சர் ஈசான் டீ தாபா, தாய்லாந்தில் உள்ள ஆஸ்திரேலியா நாட்டுத்தூதரகத்தின் துணைத் தலைவரும், அமைச்சருமான ஆண்ட்ரூ ஏகன் மற்றும் தாய்லாந்திலுள்ள பெல்ஜியத்தின் தூதர் மைக்கேல் பாரிஸ் ஆகியோர் தலைமை ஏற்றனர்.
நிலைத்த கல்வி மேம்பாட்டு வளர்ச்சியின் பொதுச் செயலாளர் கோகுல்நாத் மதியழகன் கலந்துகொண்டு உலகக் கல்வித்தர மேம்பாட்டு குறியீடை அறிமுகம் செய்தார்.
அந்தவகையில், உலக கல்வி மேம்பாட்டுத் தர மதிப்பீட்டுப் பட்டியலில் தமிழ்நாட்டின் கோவையில் உள்ள எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் ஓர் அங்கமான ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி உலகின் உயர் கல்வி நிறுவனங்களில் முதல் 10 இடங்களில் இருப்பதற்கான அங்கீகாரத்தை மாநாட்டில் பெற்றது.
இதற்கான விருது மற்றும் சான்றிதழை எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அரங்காவலர் சுந்தர், ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியின் முதல்வர் டேவிட் ரத்தினராஜ் இணைந்து பெற்றனர்.
