ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி மாணவர்கள் ஸ்ரீலங்காவில் நடைபெற்ற 9வது ஆசிய கோஜு ரியு கராத்தே ஃபெடரேஷன் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொண்டு சாதனை படைத்தனர்.
இறுதியாண்டு மெக்கானிக்கல் இன்ஜினியரிங் மாணவர் கைலாஷ், 84 கிலோ பிரிவில் தனிநபர் குமித்தே போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார். சீனியர் ஆண்கள் 84 கிலோ பிரிவில் வெள்ளிப் பதக்கத்தையும், தனிநபர் கட்டா போட்டியில் வெண்கலப் பதக்கத்தையும் வென்றார்.
மூன்றாம் ஆண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் இன்ஜினியரிங் மாணவர் தாரிணீஷ் தனிநபர் குமித்தே +84 கிலோ பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார்.
இரு மாணவர்களும் 21 வயது பிரிவின் கீழ் மிக்ஸ் டீம் கட்டா மற்றும் டீம் குமித்தே நிகழ்வுகளில் ஒன்றாக இணைந்து தங்கப் பதக்கங்களைப் பெற்றனர். போட்டியில் இக்கல்லூரியின் மாணவர்கள் 9 பதக்கங்கள் வென்றனர்.
பதக்கங்களை வென்ற மாணவர்களை எஸ்.என்.ஆர்.சன்ஸ் சாரிடபிள் டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் சுந்தர், தலைமை நிர்வாக அதிகாரி மகேஷ் குமார், முதல்வர் சௌந்தர்ராஜன், கல்லூரியின் உடற்கல்வி இயக்குனர்கள் நித்தியானந்தன், உமாராணி பாராட்டினர். மாணவர்களுக்கு போட்டியில் கலந்து கொள்ள அனைத்து ஸ்பான்ஸெர்ஷிப் உதவிகளையும் கல்லூரி நிர்வாகம் செய்துள்ளது.
