ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி கணினி அறிவியல் ஏ.ஐ.டி.எஸ் துறை இரண்டாமாண்டு மாணவர் சச்சின் மாநில அளவிலான சீனியர் தரவரிசை பேட்மிண்டன் போட்டியில் ஒற்றையர் பிரிவில் பங்கேற்று தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

தமிழ்நாடு மாநில அளவிலான சீனியர் தரவரிசை பேட்மிண்டன் போட்டி தென்காசி மாவட்டத்தின் குற்றாலத்தில் உள்ள பவர்பிளே பேட்மிண்டன் அகாடமியில் மே 30 முதல் ஜூன் 4 வரை நடைபெற்றது. இப்போட்டியில் பங்கேற்று விளையாடிய சச்சின் தங்கம் வென்றுள்ளார். இதன்மூலம் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக ஒற்றையர் பிரிவில் முதல் இடத்தைப் பிடித்துள்ளார்.

தங்கம் பதக்கம் வென்ற மாணவர் சச்சினை, எஸ்.என்.ஆர்.சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் சுந்தர் ராமகிருஷ்ணன், கல்லூரியின் முதல்வர் மற்றும் செயலர் சிவக்குமார் ஆகியோர் பாராட்டினர்.