ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கான வரவேற்பு விழா மற்றும் புத்தாக்க பயிற்சி விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவின் ஒரு பகுதியாக மாணவ, மாணவியர்களை ஊக்கப்படுத்தும் விதமாக பல்வேறு சிறப்பு பேச்சளார்களின் சிறப்புரை ஏற்பாடு செய்யப்பட்டது.
நிகழ்வின் சிறப்பு விருந்தினராக ரூட்ஸ் குழும நிறுவனங்களின் மனித வளத்துறை இயக்குநர் சிந்தனை கவிஞர் கவிதாசன் பங்கேற்று மாணவர்களிடம் சிறப்புரை ஆற்றினார்.

மாணவர்களிடையே அவர் பேசும் போது, நல்ல நட்பின் முக்கியத்துவம், விடாமுயற்சி, தன்னம்பிக்கை, புத்தக வாசிப்பின் முக்கியத்துவம், உற்சாக பேச்சு, எண்ணங்களின் வலிமை மற்றும் பல இன்றியமையாத செயல்களின் நுணுக்கங்களை பகிர்ந்துகொண்டார்.
பண்பு, தைரியம், திறமை, அர்ப்பணிப்பு, படைப்பாற்றல் போன்ற நல்ல பழக்க வழக்கங்களை சாதித்த மனிதர்கள் பின்பற்றியிருப்பார்கள். எனவே இவற்றை எதிர்கால மாணவ சமுதாயம் பின்பற்ற வேண்டுமென கேட்டுகொண்டார்.
நிகழ்வில் கல்லூரின் முதல்வர் சவுந்தர்ராஜன், முதலாம் ஆண்டு திட்டத் தலைவர் சக்திவேல் ஆறுச்சாமி மற்றும் விசித்திர சிவாஜி மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

