ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் மகளிர் தலைமையிலான ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் பற்றிய தேசிய அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது.
தொடக்கவிழாவில் கல்லூரி முதல்வர் சித்ரா, அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சியை மகளிர் தொழில்முனைவோரின் பங்கு பற்றிக் குறிப்பிட்டார்.
ஸ்பினோஸ் லைஃப் சைன்ஸ் அண்ட் ரிசர்ச் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அபிராமசுந்தரி பேசும்போது, பெண்கள் தலைமை தாங்கும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் மீள்தன்மை, புத்தாக்கம் மற்றும் ஆராய்ச்சி அடிப்படையிலான வணிகம் பற்றித் தலைமையிடத்திலிருந்து தனது கருத்துகளை எடுத்துரைத்தார்.
சென்னையைச் சேர்ந்த கன்சல்டிங் அண்ட் பியாண்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை செயல் அலுவலர் ரத்தன்தீப் உமேஷ் பேசுகையில், பொருளாதாரத்தைக் கையாளுதல், அதற்கான உத்திகளைத் திட்டமிடல் மற்றும் நிலைத்த வளர்ச்சிக்கான நடைமுறைகள் மூலம் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் அமைப்பை வலுப்படுத்துவதில் தலைமைப் பதவி வகிக்கும் பெண்களின் பங்கு குறித்து உரையாற்றினார்.
சென்னையைச் சேர்ந்த பிளாக்டார்ட்ஸ் லேப்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் முதுநிலைத் திட்ட மேலாளர் ரம்லத் தஸ்லீம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, வணிகப் பகுப்பாய்வுகள், செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவுகள் சார்ந்து தீர்மானிப்பதிலும் போட்டியிடுதலிலும் பெண் கண்டுபிடிப்பாளர்களின் பங்களிப்புக் குறித்துப் பேசினார்.
