ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியும், ஹேக்கப் டெக்னாலஜி பிரைவேட் லிமிடெட் நிறுவனமும் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்டன.

எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் ஆர்.சுந்தர், ஹேக்கப் டெக்னாலஜி பிரைவேட் லிமிடெட் நிறுவன நிறுவனர் மற்றும் இயக்குநர் தினேஷ் ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர்.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஆராய்ச்சி மற்றும் சைபர் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில், சைபர் பாதுகாப்பை விரிவுப்படுத்த ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. தொழில்துறை மற்றும் கல்லூரி கல்விக்கு இடையிலான இடைவெளியைக் குறைக்க துல்லியமான அறிவாற்றல் பயன்படுத்தப்படும்.

இப்புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்ச்சியில், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் சிவக்குமார், தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் விஜயகுமார், துறைத்தலைவர் சந்தானகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.