ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், சாதனை மாணவர்களுக்குப் பாராட்டு விழா நடைபெற்றது. கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் சிவக்குமார் தலைமை வகித்தார்.
அமெரிக்க குளோபல் சுற்றுச்சூழல் பல்கலைக்கழகத்தில் கௌரவ டாக்டர் பட்டம் பெற்ற, எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் சுந்தருக்கு, மலர் மாலை அணிவித்தும், மலர்க்கொத்து வழங்கியும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து சென்னை தொழில்நுட்ப நிறுவனத்தில் நடைபெற்ற, தேசிய அளவிலான ஸ்மார்ட் இந்தியா-2025 ஹேக்கத்தான் போட்டியின் வன்பொருள் பிரிவில், முதல் பரிசு பெற்ற 6 மாணவர்களுக்கு மடிக்கணினி, “மந்திரி” என்ற திரைப்படத்தை தயாரித்து நடித்த மாணவர்களுக்கு, கல்லூரி சார்பாக ரூ. 1 லட்சம் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.
எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளை தலைமை நிர்வாக அதிகாரி மகேஷ்குமார், பேராசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் கலந்துகொண்டனர்.
