ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் ஆஹா… கண்ணதாசா…! என்ற கவிஞர் கண்ணதாசனைப் பற்றிய இரண்டு நாள் சொற்பொழிவு நிகழ்வு நடைபெற்றது.


இந்த இரண்டு நாட்கள் நடைபெற்ற நிகழ்வில்,

முதல் நாளில் (2.11.2024) இலக்கியச்சுடர் ராமலிங்கம் “கண்ணதாசன் நாட்டும் அறம்” என்ற தலைப்பிலும்,

தமிழருவி மணியன் “கண்ணதாசன் சாற்றும் பொருள்” என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.

இரண்டாம் நாள் நிகழ்வில் (3.11.2024) பர்வீன் சுல்தானா “கண்ணதாசன் ஏத்தும் இன்பம்” என்ற தலைப்பிலும்,

மரபின் மைந்தன் முத்தையா “கண்ணதாசன் காட்டும் வீடு” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.


இந்நிகழ்வில் ஶ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிர்வாக இயக்குநர் எம்.கிருஷ்ணன், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.
