ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரியின் வருடாந்திர விளையாட்டு தினம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. தொடக்க விழாவில் எஸ்.என்.ஆர்.சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் சுந்தர் தலைமை வகித்தார்.
கோவைப்புதூர் தீயணைப்பு நிலையம், அகில இந்திய வனவிலங்கு நிதி மற்றும் தீயணைப்பு அலுவலர் சூசைநாதன் மார்ட்டின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
மருந்தியல் கல்லூரியின் முதல்வர் ஸ்ரீராம், துணை முதல்வர் கோபால் ராவ், பேராசிரியரும் விளையாட்டு ஒருங்கிணைப்பாளருமான ஜெயப்பிரகாசம் ஆகியோர் முன்னிலையில் நிகழ்வு நடைபெற்றது.
நிகழ்ச்சியில் கொடியேற்றம், மாணவர்களின் அணிவகுப்பு, ஒலிம்பிக் ஜோதி ஏற்றுதல், உறுதிமொழி எடுத்தல் ஆகியவை இடம்பெற்றன. பல்வேறு தடகள நிகழ்வுகள் நடைபெற்றன.


