டைக்கின்-இந்தியா நிறுவனத்தின் இயக்குநர் சஞ்சய் கோயல் சிறப்பு மையத்தைத் திறந்து வைத்தார். டைக்கின் தென் இந்திய பிராந்திய துணைத் தலைவர் ராவ், பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டு ஆலோசகர் காந்தி,கல்லூரி முதல்வர் கிரிராஜ், துறைத்தகைவர் அரசு உள்ளிட்டோர்.
பி.எஸ்.ஜி பாலிடெக்னிக் கல்லூரி, டைக்கின் ஏர் கண்டிஷனிங் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து, ஹீட்டிங், வென்டிலேஷன், மற்றும் ஏர் கண்டிஷனிங் துறையில் திறன் மேம்பாட்டை நோக்கமாகக் கொண்ட சிறப்பு மையத்தை கல்லூரி வளாகத்தில் திறக்கப்பட்டுள்ளது.
ரூ.20 லட்சம் மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ள இந்த மையம், மாணவர்களுக்கான நேரடி பயிற்சி, பயிற்சியாளர் பயிற்சி திட்டங்கள், வேலையற்ற இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள், மேம்பட்ட எச்.வி.ஏசி தொழில்நுட்பங்கள் குறித்த கருத்தரங்குகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்த உள்ளது. டைக்கின்-இந்தியா நிறுவனத்தின் இயக்குநர் சஞ்சய் கோயல் சிறப்பு மையத்தைத் திறந்து வைத்தார். மேலும், டைக்கின் தென் இந்திய பிராந்திய துணைத் தலைவர் ராவ், பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டு ஆலோசகர் காந்தி உள்ளிட்ட பல்வேறு தொழில் நிபுணர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில், பி.எஸ்.ஜி பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் டைக்கின் நிறுவனத்தின் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த மூலம், எச்.வி.ஏசி துறையில் உள்ள திறன் வேற்றுமையை குறைத்து, சர்வதேச தரத்துக்கு ஏற்ப திறமையான தொழிலாளர்களை உருவாக்குவது முக்கிய நோக்கமாகக் கொள்ளப்பட்டுள்ளது.