அத்திப்பாளையம் ஊராட்சியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்டத்தின் 7 நாள் சிறப்பு முகாமின் தொடக்க நிகழ்வு அண்மையில் நடைபெற்றது. சேவை, கற்றல், மாற்றம் ஆகிய மூன்று கோணங்களிலும் முன்னேற மாணவர்கள் உறுதி மேற்கொண்டுள்ளனர்.
நிகழ்வில் என்.எஸ்.எஸ் அலுவலர் பிரகதீஸ்வரன் வரவேற்புரை வழங்கினார். முகாமின் நோக்கத்தை ஆர்.ஆர்.சி திட்ட அலுவலர் சஹானா ஃபாத்திமா விளக்கினார். சிறப்பு விருந்தினர்களாக அத்திப்பாளையம் ஒன்றிய பொறுப்பாளர் சுரேஷ்குமார், முன்னாள் கவுன்சிலர் சின்னசாமி, கோரண்டலார் குல மண்டப நிர்வாக பொறுப்பாளர் ராம்தாஸ், மற்றும் அத்திப்பாளையம் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயா ஆகியோர் கலந்து கொண்டு, , சமூகப்பணியில் இளைஞர்களை ஈடுபடுத்தி, சமூக மேம்பாட்டிற்கு தூண்டுகோலாக அமையவுள்ளது என வாழ்த்துரை வழங்கினர்.