எஸ்.என்.எஸ் தொழில் நுட்பக் கல்லூரியின் மின் தொழில்நுட்ப துறையின் இணைப் பேராசிரியர் சிவ ராம்குமார் மின்சார வாகன ஆராய்ச்சி துறையில் தேசிய அளவில் உயரிய ஸ்கோபஸ் தரவரிசையைப் பெற்றுள்ளார்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் வெளியிடப்பட்ட மொத்த உயர்தர மின்சார வாகன ஆராய்ச்சி கட்டுரைகளை அடிப்படையாகக் கொண்டு, இந்திய அளவில் 9வது இடம், தமிழ்நாடு அளவில் 3வது இடம் என்ற தரவரிசைகளை பெற்றுள்ளார்.
மேலும், 2025ம் ஆண்டிற்கான ஸ்கோபஸ் மின்சார வாகன ஆராய்ச்சி கட்டுரைகளை அடிப்படையாகக் கொண்டு இந்தியாவில் 3வது இடம், தமிழ்நாட்டில் 2வது இடம் என்ற தரவரிசைகளை பெற்றுள்ளார்.
