எஸ்.என்.எஸ் பொறியியல் கல்லூரியில் மேலாண்மை துறை சார்பில் ‘அர்த்தசாஸ்திரா’25 மற்றும் பிஸ் பிஸ்டு ப்ராஜெக்ட் எக்ஸ்போ நிகழ்வு அண்மையில் வெற்றிகரமாக நடைபெற்றது. இதில் 70க்கும் மேற்பட்ட நிறுவனங்களைச் சேர்ந்த 1,500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.

நிகழ்வில் தொழில்நுட்ப மற்றும் தொழில்நுட்பம் அல்லாத பல்வேறு போட்டிகள் இடம்பெற்றன. மேலும், தொழில் முனைவு, தலைமைத்துவம் மற்றும் தொழில்துறை வலையமைப்பை மேம்படுத்தும் 64 புதுமையான திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

இந்த நிகழ்வில் பிரஸ்ஸானா குழுமங்களின் இணை நிர்வாக இயக்குநர் அனிஷ் பிரஸ்ஸேனா தலைமை விருந்தினராக கலந்து கொண்டார். விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த நடன இயக்குநர் பெரா கௌதம் குமார் கலாச்சார தலைமை விருந்தினராக பங்கேற்றார். மேலும், விப்ரோ, ஷ்னைடர் எலக்ட்ரிக், கேஎஸ்பி லிமிடெட், ஏபிடி லிமிடெட், சைபர் ஆரன் மற்றும் ஸ்டார்ட்-அப் டிஎன் போன்ற துறைகளில் முன்னணி நிறுவனங்களின் தலைவர்கள் பேச்சாளர்களாக கலந்து கொண்டனர்.