எஸ்.என்.எஸ் அகாடமி நடத்திய ‘ஸ்பெக்ட்ரம் 2025 – ஜென் ஏஐ எக்ஸ்போ’ என்ற கண்காட்சி மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மூலம் சிக்கலான பிரச்சனைகளுக்கு நவீன தீர்வுகளை உருவாக்கி காண்பிக்கான மேடையாக அமைந்தது. இந்தக் கண்காட்சி கற்றல், கூட்டமைப்பு மற்றும் புதுமை ஆகியவற்றின் சிறந்த வெளிப்பாட்டாக வெளிச்சமிட்டது.

கண்காட்சியின் முதன்மை விருந்தினராக எச்.சி.எல் நிறுவனத்தின் பிராந்தியத் தலைவர் மற்றும் பங்குதாரர் வினோத் பங்கேற்று சிறப்பித்தார். மேலும், காக்னிசண்ட் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் தலைமைத் தொழில்நுட்ப நிபுணர் செந்தில்நாதன் ராமசுப்பு மற்றும் எஸ்ட்டேர்ரோ நிறுவனத்தின் மூத்த தயாரிப்பு மேலாளர் மனிஷ் நாகுலா சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று, ஏஐ எதிர்கால வளர்ச்சியில் எவ்வாறு முக்கிய பங்கு வகிப்பதனை பற்றிய ஆழமான விளக்கத்தை வழங்கினர்.

முன்னதாக, எஸ்.என்.எஸ் அகாடமி பள்ளியின் முதல்வர் ஸ்ரீவித்யா பிரின்ஸ் மாணவர்களை வரவேற்றார்.