ஸ்ரீ நேரு மஹா வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஏப்ரல் 2025ஆம் கல்வியாண்டில் கோவை, பாரதியார் பல்கலைக்கழக அளவில் நடைபெற்ற பருவத் தேர்வில் 30 மாணவ, மாணவிகள் தரவரிசைப் பெற்று சாதனைப் படைத்துள்ளனர்.
இளங்கலை நுண்ணுயிரியல் துறை மாணவி மஞ்சிமா, முதுகலை உயிர் தொழில்நுட்பவியல் துறை மாணவி சௌந்தர்யா, முதுகலை மேலாண்மை துறை மாணவி சந்தானமாரியம்மாள்.ஆகியோர் முதல் தரவரிசைப் பெற்று தங்கப்பதக்கம் வென்றனர்.
அதன்படி, இளங்கலை வணிகவியல் நிறுவனச் செயலாளர் துறையில் 4, வர்த்தக நிதியியல் துறையில் 1, வணிக வங்கி மற்றும் காப்பீட்டு துறையில் 1, வர்த்தக தகவல் தொழில்நுட்பத்துறையில் 3, வணிகவியல் தொழில்முறை கணக்கியல் 1, வேதியியல் துறையில் 1, நுண்ணுயிரியல் துறையில் 2, கணினி தொழில்நுட்பத்துறையில் 4, சைபர் பாதுகாப்பு தரபகுப்பாய்வு துறையில் 1, முதுகலை மேலாண்மை துறையில் 7. முதுகலை உயிர் தொழில்நுட்பவியல் துறையில் 2, நுண்ணுயிரியல் துறையில் 2, முதுகலை வணிகவியல் கணினி பயன்பாட்டுத் துறையில் 1, என மாணவர்கள் பல்வேறு துறைகளில் தரவரிசைப் பெற்றுள்ளனர்.
இம்மாணவர்களை கல்லூரி நிர்வாகத்தினர் பாராட்டினர். கல்லூரி முதல்வர் சுப்பிரமணி, பாராட்டு தெரிவித்து நினைவுப்பரிசுகளை வழங்கினார்.
