கோவை மாவட்ட மாயோன் வீர கலைக் கூட ஆசான் சக்திவேல் மணிகண்டன் தலைமையில், நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் சிலம்ப பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த 5ம் தேதி வேலூரில் மாநில அளவிலான சிலம்பப் போட்டி நடைபெற்றது. இதில் கோவையைச் சேர்ந்த மாணவர்கள் சிலம்ப போட்டியில் கலந்து கொண்டனர்.
போட்டியில் சக்திவேல் மணிகண்டன் சக்திவேல் மணிகண்டன் தலைமையில் சென்ற குழுவினர் சிலம்பப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றனர். இதில் 50 மாணவர்கள் தங்க பதக்கமும், 10 மாணவர்கள் சில்வர் பதக்கமும், 5 மாணவர்கள் வெண்கலம் பதக்கமும் பெற்றனர்.
போட்டியில் மாயோன் வீர கலை கூடம் சிலம்ப மாணவர்கள் அனைத்து பிரிவுகளிலும் வெற்றி பெற்று சிறந்த அணிக்கான விருதினை பெற்றனர்.

