கோவை இந்திய தொழில் கூட்டமைப்பு சங்கத்தினரை சந்தித்து, திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள தொழில் மற்றும் வணிக முன்னேற்றம் குறித்து மேற்கு மண்டல பொறுப்பாளர் மற்றும் கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளர் செந்தில் பாலாஜி கலந்துரையாடினார். இதில் கணபதி ராஜ்குமார் எம்.பி, சிஐஐ தெற்கு மண்டல முன்னாள் தலைவர் நந்தினி ரங்கசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.