சுகுணா கலை அறிவியல் கல்லூரியில் “தொழில் முனைவில் புதுமை – எதிர்காலத்திற்கான திறவுகோல்” என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது.
கல்லூரியின் தலைவர் லட்சுமி நாராயணசாமி மற்றும் சுகுணா லட்சுமி நாராயணசாமி வழிகாட்டுதலின் படி, செயலர் ஸ்ரீகாந்த் கண்ணன், இயக்குனர் சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதல்வர் ராஜ்குமார் வரவேற்புரை வழங்கினார்.
புதுடெல்லியை சேர்ந்த பேராசிரியர் மற்றும் ஆராய்ச்சி இயக்குனர் பிரபாகரன் கலந்துகொண்டு தொழில் முனைவில் புதுமை என்ற தலைப்பில் பேசினார். இந்த நிகழ்வில் ஏராளமான மாணவர்கள் பங்கேற்றனர்.
