ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு அண்மையில் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியை சந்தித்தார்.

இந்த சந்திப்பு குறித்து சத்குரு தனது எக்ஸ் தளத்தில்,”ரேவந்த் ரெட்டி அவர்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. தெலுங்கானாவிற்கு செழிப்பைக் கொண்டு வருவது மற்றும் ஹைதராபாத்தை உலகளாவிய நகரமாக மாற்றும் அவரது தொலைநோக்குப் பார்வை ஊக்கம் அளிக்கிறது” என பதிவிட்டுள்ளார்.

2 31

இதேபோல், முதல்வர் ரேவந்த் ரெட்டி தனது எக்ஸ் தளத்தில்,”ஈஷா அறக்கட்டளை நிறுவனரும், புகழ்பெற்ற ஆன்மிகவாதியுமான சத்குரு மரியாதை நிமித்தமாக சந்தித்தார்” என பதிவிட்டுள்ளார். இந்த சந்திப்பு அரசியல் மற்றும் ஆன்மிக உலகில் கவனத்தை ஈர்த்துள்ளது.