திண்டுக்கல்லில் ஈஷா மண் காப்போம் இயக்கம், பிஎஸ்என்ஏ கல்லூரி மற்றும் ஹெச்டிஎப்சி வங்கி இணைந்து ”ஒருங்கிணைந்த பண்ணையம் – ஒவ்வொரு நாளும் வருமானம்” என்ற மாபெரும் கருத்தரங்கு நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு பயனுள்ள தகவல்களை பெற்றனர்.
மண் காப்போம் இயக்க ஒருங்கிணைப்பாளர் சுவாமி ஸ்ரீமுகா, ”விவசாயிகள் ஒரே ஒரு பயிரை மட்டுமே நம்பி நஷ்டம் அடையாமல், ஒருங்கிணைந்த பண்ணையம் முறையில் பல பயிர்கள் மூலம் நாள்தோறும் வருமானம் பெறலாம்” என்று கூறினார்.
முன்னோடி விவசாயிகள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டு, ஆடு, மாடு, கோழி, மீன் வளர்ப்பு உள்ளிட்ட ஒருங்கிணைந்த பண்ணையம் முறையின் பயன்பாடுகளை விளக்கினர். மேலும், விவசாய கண்காட்சி மற்றும் மாதிரி பண்ணை அமைக்கப்பட்டு விவசாயிகளுக்கு பயனளித்தது.