பி.எஸ்.ஜி சர்வஜன மேல்நிலைப்பள்ளியின் நிறுவன நாள் விழா, பி.எஸ்.ஜி தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். நிகழ்விற்கு பி.எஸ்.ஜி அறநிலையம் நிர்வாக அறங்காவலர் கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

3 9

அமெரிக்க தொழிலதிபர் கோபால் சடகோபால், யுஏஇ கால்ஃபர் இன்ஜினியரிங் & காண்டிராக்டிங் எமிரேட்ஸ்
தலைமை நிர்வாக அதிகாரி ஸ்ரீதர், சென்னை, கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையம் (சிஎஸ்ஐஆர்)
முதன்மை விஞ்ஞானி மற்றும் ஆலோசகர் பாரிவள்ளல், சேலம் ஹெலிக்ஸ் ஓபன் ஸ்கூல் மற்றும் லெர்னிங் சென்டர் இணைச்செயலர் சசிகலா ஆகியோருக்கு சீரார்ந்த முன்னாள் மாணவர் விருதுகள் வழங்கப்பட்டன.

2 11

தொடர்ந்து பள்ளியின் நூற்றாண்டு மலர் வெளியிடப்பட்டது. பி.எஸ்.ஜி நிறுவனங்களின் தலைவர் ஜி.ஆர்.கார்த்திகேயன், பள்ளியின் செயலர் நாராயணசாமி, ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

6 3 5 6