பிரதமர் மோடியின் வழிகாட்டுதலின்படி, நாடு முழுவதும் உள்ள மக்களவைத் தொகுதி உறுப்பினர்கள் சார்பில் ‘சான் சத்’ விளையாட்டுத் திருவிழா 2025 நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, இளைய தலைமுறையினரின் விளையாட்டுத் திறனை அங்கீகரிக்கும் விதமாக நீலகிரி பாராளுமன்றத் தொகுதியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் முயற்சியில் ‘சான் சத்’ விளையாட்டுத் திருவிழா நவம்பர் 21ம் தேதி தொடங்கியது. இதில் வெற்றி பெறுவோர் தேசிய, சர்வதேச மற்றும் ஒலிம்பிக் போட்டிகளுக்குத் தயார் செய்யப்படுவர்.

இப்போட்டிகளில் இறகுப்பந்து, கால்பந்து, கைப்பந்து, கபடி, கோகோ, தனிநபர் சிலம்பம், யோகா நடந்து முடிந்துள்ளன. டர்ஃப் கிரிக்கெட் போட்டிகள் டிசம்பர் 12 முதல் டிசம்பர் 14 ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில், வெற்றி பெறுபவர்களுக்கு தகுந்த வெகுமதியும், கோப்பையும் பரிசாக வழங்கப்படும்.
இந்நிலையில் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்ட மற்றும் இதுவரை வெற்றி பெற்றுள்ள வீரர் வீராங்கனைகள் அனைவருக்கும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.


