கோவை ஸ்ரீ நேரு மஹா வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை (13.01.2026) சமச்சீர் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

கல்லூரியின் தலைவர் மஹாவீர் போத்ரா விழாவை தொடங்கி வைத்தார். இவ்விழாவில் முதல் நிகழ்வாக சிறப்பு விருந்தினர்கள் பூரணகும்பம் மரியாதையோடு, மாணவிகள் முளைப்பாரி மற்றும் மாவிளக்கு ஊர்வலம் எடுத்துச் சென்று கணபதி வழிபாடு நடைபெற்றது. கும்மி, ரேக்ளா, கபாடி, கயிறு இழுத்தல், உறியடித்தல், சிலம்பாட்டம் போன்ற போட்டிகளும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

மாணவர்கள் பாரம்பரியத்தை போற்றி துறைவாரியாக மாட்டுவண்டிகள், நாட்டு மாடுகள், குதிரை, சண்டைசேவல் போன்றவைகளும் குடிசை, கிணறு, தெப்பக்குளம், அரவைக்கல் உரல், அம்மிக்கல் போன்ற பழங்காலப் பொருட்களும் காட்சிப்படுத்தி சிறப்பாக கொண்டாடினர். இவ்விழாவில் மாணவ, மாணவிகளுக்கு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

SNMV 2 scaled

இவ்விழாவில் எஸ்.என்.வி. பள்ளியின் செயலாளர் கோபால் புராடியா, கல்லூரியின் துணைச் செயலாளர் பாரத்குமார் ஜெகமணி, முதல்வர் முனைவர் சுப்பிரமணி, மேலாண்மைத்துறை இயக்குநர் முத்துக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பொங்கல் வாழ்த்துக்களை கூறி விழாவினை சிறப்பித்தனர்.

இவ்விழாவினை தமிழ்த்துறைதலைவர் வெங்கடலட்சுமி ஒருங்கிணைத்தார்.மேலும் இவ்விழாவினை பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் என 3500க்கும் மேற்பட்டோர் கொண்டாடி மகிழ்ந்தனர்.