சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளியில், கோவை சகோதயா கூட்டமைப்புப் பள்ளிகள் சார்பில், சிறந்த ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது. 23 பள்ளிகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு, ‘நல்லாசிரியர் விருது 2026’ வழங்கப்பட்டது.

கோவை சகோதயா கூட்டமைப்புப் பள்ளிகள் அமைப்பின் தலைவர் கிரீஷ் ஈஸ்வரன் முன்னிலை வகித்து பேசுகையில்: இன்றைய கல்வி முறையில் நாம் தவறவிடுவது மாணவர்களின் நற்பண்புகளை உருவாக்குவதைத்தான். பொருளாதார ரீதியாக உலகம் பல சிக்கல்களைச் சந்தித்து வரும்போதும், இந்தியா வலிமையான பொருளாதார நாடாக முன்னேறி வருகிறது. இந்தியா ஒரு ‘முழு வளர்ச்சி அடைந்த நாடாக’ மாறும் நாள் வெகுதொலைவில் இல்லை என்று பேசினார்.

4a 2 scaled

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சச்சிதானந்த ஜோதி நிகேதன் பள்ளிச் செயலர் கவிதாசன் பேசுகையில்: இன்றைய நவீன உலகில் ஏஐ, சமூக மாற்றங்கள், நிர்வாகம் மற்றும் பெற்றோர்களின் அழுத்தங்களுக்கு இடையே ஆசிரியப் பணி பெரும் சவாலாக மாறியுள்ளது.

நம் வாழ்க்கை தொழில், குடும்பம், சமூகம், சுயம் என்ற நான்கு சக்கரங்களில் இயங்குகிறது. இதில் தொழில் மற்றும் வாழ்க்கையைச் சமநிலையாக வைத்திருக்க வேண்டும். குடும்பத்தில் அன்பும், வகுப்பறையில் ஆற்றலும், செயலில் நேர்மையும் இருக்க வேண்டும் என்று பேசினார்.

விழாவில் பள்ளி முதல்வர் உமாமகேஸ்வரி, துணை முதல்வர் சக்திவேல், கோவை சகோதயா கூட்டமைப்புப் பள்ளிகள் அமைப்பின் செயலர் பத்மநாபன், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.