கோவையில் ஜூன் 16ம் தேதி அகில இந்திய ரஷ்ய கல்வி கண்காட்சியின் 2ம் பதிப்பு கிராண்ட் ரீஜெண்ட் ஹோட்டலில் நடைபெறவுள்ளது.
இந்திய தேசிய மருத்துவ ஆணையத்தின் மாறிவரும் விதிமுறைகள், வழிகாட்டுதல்களை ரஷ்யப் பல்கலைக்கழகங்கள் கடைப்பிடித்து வருவதால், வெளிநாடுகளில் மருத்துவக் கல்வியை நாடும் இந்திய மாணவர்களுக்கு ரஷ்யா முதன்மையான தேர்வாக உள்ளது.
கண்காட்சியில் எம்.பி.பி.எஸ், பொறியியல், தொழில்நுட்பப் படிப்புகளில் இளநிலை பட்டங்களுக்கும் ஸ்பாட் அட்மிஷன் நடைபெறவுள்ளது. இதில் ரஷ்யாவின் முக்கிய பல்கலைக்கழகங்கள் பங்கேற்கின்றன.
தேசிய தகுதி நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற,12ம் வகுப்பில் முக்கிய பாடங்களில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண் பெற்ற இந்திய மாணவர்கள் இளநிலை படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம். தமிழ் வழியில் படித்த மாணவர்களும் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம். ரஷ்யாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் சேர சி.இ.டி, ஐ.இ.எல்.டி.எஸ் போன்ற முன் தகுதித் தேர்வுகள் தேவை இல்லை.
கடந்த ஆண்டில் ரஷ்யாவில் மருத்துவம் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை 200% அதிகரித்துள்ளது. எம்.பி.பி.எஸ். படிப்பதற்கான கல்விக் கட்டணம், ஆண்டொன்றுக்கு மிகக் குறைவாக ரூ.3 லட்சத்திலிருந்து தொடங்குகிறது.
