ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர் ஆலம் சார்பில் “நமது மகள்களை காப்போம்” திட்டத்தின் தொடக்க விழா மார்ட்டின் ஹோமியோபதி கல்லூரியில் நடைபெற்றது. நிகழ்வில் கௌரவ விருந்தினர்களாக ரோட்டேரியன் லீமா ரோஸ் மார்டின் மற்றும் ரோட்டேரியன் சந்தோஷி ராஜேஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த சமூக நலத் திட்டத்தின் மூலம் மொத்தம் 3206 பெண் குழந்தைகளுக்கு இரண்டு வாரங்களுக்கு சைபர் பாதுகாப்பு, சுய பாதுகாப்பு பயிற்சி வழங்கப்படும். பயிற்சியின் முடிவில், சிறப்பாகப் பயிற்சி பெற்ற மாணவிகளுக்கு “சைபர் சேம்பியன் விருது” வழங்கப்படும். இதுவரை 450க்கும் மேற்பட்ட பெண் குழந்தைகள் இந்தத் திட்டத்தின் மூலம் பயனடைந்து, சைபர் சேம்பியன்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

விழாவில் பங்கேற்ற 100 க்கும் மேற்பட்ட பெண்கள் தங்களுக்குத் தெரிந்த, குறைந்தது பத்து பெண்களுக்கு சைபர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதாக உறுதி ஏற்றுக் கொண்டனர்.

பெண்கள் பாதுகாப்பு, சமூக முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்ட இந்த சிறப்புத் திட்டத்தின் நன்கொடையை, ரோட்டேரியன் சந்தோஷி ராஜேஷ் “ஐ எக்ஸ்ப்ளோர் பவுண்டேஷன்” நிறுவனத்திற்கு வழங்கினார். நிகழ்வில் திட்டத் தலைவர் ரோட்டேரியன் கவிதா கோபாலகிருஷ்ணன், ஆலம் கிளப் தலைவர் அமுதா, உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.