கோவை மனிதவள மேம்பாட்டு மையம் மற்றும் ரூட்ஸ் குரூப் நிறுவனங்கள் இணைந்து பன்னாட்டு மனிதவள தினத்தை கொண்டாடியது. தமிழ்நாடு தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநரகத்தின் கோவை மண்டல கூடுதல் இயக்குனர் பூங்கொடி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டனர்.

ரூட்ஸ் நிறுவனங்களின் தலைவர் ராமசாமி, நிறுவன இயக்குனர் மற்றும் மனிதவள மேம்பாட்டு மையத் தலைவர் கவிதாசன், நிறுவனத்தின் முதன்மை நிதித்துறை அதிகாரி ரவி, இயக்குநர் சந்திரசேகர்  கலந்துகொண்டனர்.

சிறந்த விரிவுரையாளர்கள் விருதினை நேரு கல்வி நிறுவனங்களின் எம்.பி.ஏ துறை தலைவர் சதீஸ்குமார், வேலை வாய்ப்புத்துறை தலைவர் நாகநந்தனி, ஸ்ரீ நாராயண குரு கல்லூரியின் உதவிப் பேராசிரியர் பெல்லாரோ ஜான் ரீகன், ஜான்சன்ஸ் ஸ்கூல் ஆப் பிசினஸ் எம்.பி.ஏ துறையின் பேராசிரியை சாவித்திரி, என்.ஜி.பி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் உதவிப் பேராசிரியை மாதுலா ஆகியோர் பெற்றுக் கொண்டனர். அதேபோல சிறந்த மனிதவளம் பயிலும் மாணவர் விருதும் வழங்கப்பட்டன.